குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்கும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறும். சென்னை தேர்வு மையத்தில் உள்ள 38 தேர்வுக் கூடங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தேர்வுகூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...