நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number
il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து,
ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
இதை தனிநபர் செய்ய முடியாது..அனைத்து ஆசிரியர்களுக்கும் தான் செய்தாக வேண்டும்..இது உ.தொ.க அலுவலரின் வேலை..
24-Q File செய்து முடிக்கும்போது FORM -16 generate ஆகும்.. இந்த வேலையை
அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆடிட்டரை வைத்து செய்து, Generate ஆன Form -16 ல்
கையொப்பமிட்டு உ.தொ.க அலுவலர் நமக்கு தருவார்..இது ஒவ்வொரு காலாண்டுக்கும்
செய்ய வேண்டிய வேலை..
அடுத்ததாக E-filing என்பது,
நமது Form -16 அல்லது IT statementஐ வைத்துக் கொண்டு, வருமான வரி
அலுவலகத்தில் ஒரு புக்லெட் போன்ற ITR படிவத்தை வாங்கி, நிரப்பி, அதை
மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து ACKNOWLEDGEMENT வாங்குவோம்..
வருமானவரி அலுவலகத்தில் நமது ITR படிவத்தை வைத்து ONLINE ல் தரவேற்றம் செய்வார்கள்..
அப்போது நமக்கு 24-Q செய்த போது தரவேற்றிய தொகையும், தற்போது நாம்
வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்த ITR ல் உள்ள தொகையும் ஒரே மாதிரி
இருந்தால் நமக்கு பிரச்சினை இல்லை.. ஆனால், வித்தியாசம் இருந்தால், அந்தத்
தொகையை நாம் திருப்பி செலுத்துமாறு வருமான வரித் துறையில் இருந்து நமக்கு
கடிதம் வரும்..
இந்த மனஉளைச்சலை தவிர்க்க நாம் E-filing செய்யும் போது,
ஏற்கனவே 24-Q செய்த போது தரவேற்றிய தொகையையும், தற்போது நாம் தரவேற்றும்
தொகையையும் Tally செய்து விடுவதால் நமக்கு வருமானவரித் துறையில் இருந்து
வரியை மீண்டும் கட்டும்படி எவ்வித கடிதமும் வராது..
*யாரெல்லாம் E-filing செய்ய வேண்டும்?*
Taxable income 5,00,000/- க்கு மேலும்,
Refund வரவேண்டி இருப்பவர்களும் *கட்டாயம்* செய்ய வேண்டும்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...