கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய
வேண்டும் என்று நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அனைத்து ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நாகையில் நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கு. பார்வதி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் :
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறை கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறைச் சூழலை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் இடையூறுகள் இருந்தால் அதனை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் தமிழ், ஆங்கில வாசித்தல் திறன் அடிப்படையை உற்று நோக்க வேண்டும். மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்துவதையும், மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் கல்வி இயக்க புள்ளியியல் அலுவலர் ப. அந்துவன்சேரல், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...