மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள்
வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது.
துாய்மை
இந்தியா திட்டம் போல், பள்ளிகளில் சுகாதாரம் காப்பதற்கு மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை துாய்மை பள்ளி திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த
திட்டத்தில் பள்ளிகளில் உள்ள கழிப்பறை, சுற்றுப்புறம், குடிநீர் போன்றவற்றை
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பங்கேற்பள்ளிகள் தங்கள் பெயர்களை
இணைய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். மாநிலங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு
செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில்
மருத்துவ இணை இயக்குனர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஆசிரியர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட 9 பேர் இடம் பெறுவர்.
சிறப்பாக சுகாதாரத்தை பராமரிக்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம்
பரிசு வழங்குகிறது மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு அதிகளவு நிதியும்,
மானியமும் வழங்கப்படும். பள்ளிகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைவில் துவங்க
உள்ளதால்,
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விரைவில் குழுக்களை அமைக்குமாறு மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை மாநில கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...