அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர்
பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும்
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 4 சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்ற, பார்வைத் திறன் 6-க்கு 6 பெற்ற 30 வயது நிரம்பிய பொதுப் பிரிவினர், 35 வயது நிரம்பிய பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), 32 வயது நிரம்பிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.தகுதியுடைய விண்ணப்பதாரர் தங்களின் பெயர், கல்வித் தகுதி, முகவரி, மருத்துவச் சான்று, புகைப்படத்துடன் கூடிய சுயவிவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை, சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் ""அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6'' என்ற முகவரிக்கு வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...