மின் பிரச்னைக்கு, மொபைல் போன் மூலம் தீர்வு காண, 'மொபைல் ஆப்' செயலியை,
மின் வாரியம், விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கும், மின் தடை,
கூடுதல் கட்டணம் குறித்து புகார் செய்யவும், மின் வாரிய பிரிவு
அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
அங்குள்ள ஊழியர்கள், 'ஆதாயம்' எதிர்பார்த்து, அவர்களை
அலைக்கழிப்பு செய்கின்றனர்.மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' என்ற
திட்டத்தில், அனைத்து அரசு சேவைகளையும், கணினிமயமாக்க முடிவு செய்து
உள்ளது. இதன் மூலம், மக்கள், இணையதளம் வழியாக, எளிய முறையில், உடனுக்குடன்
அரசு சேவைகளை பெற முடியும். இதையடுத்து, 'மொபைல் ஆப்' மூலம், மின்
வினியோகம் தொடர்பானபுகார்களுக்கு தீர்வு காணுமாறு, மத்திய அரசு, மாநில மின்
வாரியங்களை அறிவுறுத்தியது. அதன்படி, மாநில மின் வாரியங்கள், மின் தடை,
மின் கட்டணம் செலுத்துதல், தினசரிமின் உற்பத்தி ஆகிய விவரங்களை உள்ளடக்கிய,
'மொபைல் ஆப்' செயலியை அறிமுகம் செய்ய வேண்டும். அதை, மின் நுகர்வோர்,
தங்கள் போனில், அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம், மொபைல் போன்
மூலமாகவே, மின் வாரிய சேவைகளை பெறலாம். ஆனால், இந்த திட்டத்தை
செயல்படுத்தாமல், மின் வாரியம் காலதாமதம் செய்து வருகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதளத்தில், மின் கட்டணம் செலுத்தும் திட்டம் உள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறும் திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. மின் தடை புகார் பெற, தனி தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. நிதி மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, புதிய திட்டங்களை செயல்படுத்த தாமதம் ஆகிறது. எனினும், மொபைல் ஆப் வசதி, விரைவாக அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...