உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர்
பதவி உட்பட, 309 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஆக., 28ல்
நடக்க உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதன்படி,
நீதிபதிகளுக்கு, 76 தனி உதவியாளர்; பதிவாளருக்கு, ஏழு தனி உதவியாளர்; துணை
பதிவாளருக்கு, ஒரு தனி உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களை தவிர,
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் 61; தட்டச்சர்கள் 84; ஆய்வாளர் 80; காசாளர்
இரண்டு; ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் ஆறு என, மொத்தம், 317 பேர் நியமிக்கப்பட
உள்ளனர். இதற்கு, http:/www.tnpsc.gov.in/ என்ற
டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் 'ஆன்லைனில்' ஆக., 3ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஆக., 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
உதவியாளர் தேர்வு ஆக., 27லிலும்; மற்ற பதவிகளுக்கு
ஆக., 28ல் நடக்கும். தேர்வு குறித்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...