புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டில் புதிய
அரசு மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.ஆண்டுதோறும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக
அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி,
கடந்த 5 ஆண்டுகளில் சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய 3 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கோயம்புத்தூரில் இந்த ஆண்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையுடன் இணைந்த தமிழக அரசின் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால், கடந்த 5 ஆண்டுகளில் 810 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் கல்லூரி:
இந்த நிலையில், புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான கட்டுமானப் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் என 161 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு தொடர் செலவினமாக ஆண்டுக்கு சுமார் ரூ.8.87 கோடி செலவாகும்.
கரூரிலும்...:
இதேபோல், கரூரிலும் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, இரு இடங்களிலும் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.229.46 கோடிக்கு நிர்வாக ஒப்புதலும் நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
808 புதிய பணியிடங்கள்:
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான 808 புதிய பணியிடங்களை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு தொடர் செலவினமாகஆண்டுக்கு ரூ.39.68 கோடி செலவாகும்.புதுக்கோட்டையில் தொடங்கப்பட உள்ள கல்லூரி, கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான969 புதிய பணியிடங்கள் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.48.55 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...