மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில்,
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தேசிய ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான
ஜே.இ.இ., தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படும். அதில், இரண்டாம் கட்ட
தேர்வு மதிப்பெண் படி, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதற்கு, நுழைவுத்
தேர்வில், 60 சதவீத மதிப்பெண்ணும், பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணில், 40
சதவீதமும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்நிலையில்,
நடப்பு கல்வி ஆண்டில் நடத்தப்பட உள்ள ஜே.இ.இ., தேர்வில், புதிய நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஐ.ஐ.டி., நிறுவனங்களுக்கான இயக்ககம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜே.இ.இ., தேர்வுக்கு பின்
வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில், பிளஸ் 2 மதிப்பெண்கள் சேர்க்கப்படாது;
நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.
அதேநேரம், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75
சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே, நுழைவுத் தேர்வு
மதிப்பெண் படி, தரவரிசை பட்டியலில் இடம் பெறுவர். தலித் மற்றும்
பழங்குடியின மாணவர்கள், பிளஸ் 2 மதிப்பெண்ணில், 65 சதவீதம் பெற்றிருக்க
வேண்டும்.
இதன் மூலம் இனி, பிளஸ் 2 தேர்வில், 75 சதவீத
மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்றாலும், ஐ.ஐ.டி.,யில் சேர முடியாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...