Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘கபாலி’ விமானம் தயாரானது எப்படி? ‘ஏர் ஏசியா’ அளிக்கும் ஆச்சர்ய தகவல்கள்!

   கபாலி படத்தின் விளம்பரங்களுக்காக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கைகோத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி, ஏர் ஏசியாவின் விமானங்களில் கபாலி படம் விளம்பரம் செய்யப்படும். மேலும் படம் வெளியாகும் தினத்தன்று சென்னையில் முதல் காட்சி பார்ப்பதற்காக பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கபாலி போஸ்டர்களைக் கொண்ட ஏர் ஏசியா விமானத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இப்படங்களை வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள். ஏ-320 என்கிற அந்த விமானம் நேற்று முதல் பெங்களூர், தில்லி, கோவா, சண்டிகர், ஜெய்பூர், குவாஹத்தி, இம்பால், விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்திய சினிமா இதுவரை பார்த்திராத இந்த விளம்பர உத்தி குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இது ஒரு ஊழியர் செய்த வேலை. முழு டிசைன் வேலைகளும் செய்துமுடிக்க ஒரு மாதமானது. ஆசியாவில் இதுபோல செய்யப்படுவது முதல்முறை என்பதால் கவனத்துடன் செய்யவேண்டியிருந்தது. இது வழக்கமான பயணிகள் விமானமாக இருந்தாலும் கபாலி படத்துடன் இணைந்துள்ளதால் அதற்கு விசேஷ கவனம் கிடைத்துள்ளது.
கபாலி விளம்பரம் தாங்கியுள்ள இந்த விமானம், படம் வெளியான பிறகும் தொடர்ந்து இயக்கப்படும். சூப்பர் ஸ்டாருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நாங்கள் தரும் மரியாதை அது. படக்குழு வந்து விமானத்தைப் பார்த்தார்கள். ரஜினிக்கும் இந்தத் தகவல் தெரிந்து அவர் விமானத்தின் புகைப்படங்களைப் பார்த்திருப்பார் என நினைக்கிறோம். இந்த விமானத்தில் பயணம் செய்கிறபோது ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
படம் வெளியாகிற நாளன்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும். விமானத்தில் பயணம் செய்கிற ரசிகர்கள், கபாலி படங்களுடன் வடிவமைக்கப்பட்ட காபி கோப்பை, பட டிக்கெட் உள்ளிட்ட பொருள்களைப் பெறுவார்கள். அதேபோல ரஜினிக்குப் பிடித்தமான மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive