தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரை
இந்தக் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய
பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில், தொழிற்கல்வி ஆசிரியர்களின்
தொகுப்பூதிய காலத்தை ஓய்வூதியம் பெற கணக்கிட வேண்டும். அனைத்து வகை
ஆசிரியர்களும் வெவ்வேறு பாடத்தில் உயர் கல்வி பெற்றிருந்தாலும்,
அவர்களுக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கியிருப்பதுபோல், தொழிற்கல்வி
ஆசிரியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், வெவ்வேறு பாடத்தில் உயர் கல்வி
பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...