நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த
ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும்
கொண்டுவரப்படவில்லை.இப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு
நடத்தஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பயிற்சிக் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) சார்பில், டெல்லியில் ‘பிராக் ஷிக் ஷக்’ எனும் ஆசியர்களுக்கான கல்வி இணையதள தொடக்கவிழா நடந்தது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுபாஷ் சந்திரா குந்தியா பேசியதாவது:ப்ளஸ் 2 முடித்த பின் ஒருங் கிணைந்த பிஎட் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பலனளிக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போதுமான அளவில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பின் புள்ளி விவரப்படி, நாட்டில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. 13 லட்சம் தொடக்கப்பள்ளிகளில் 6.6 லட்சம் ஆசிரியர்கள் முறையானபயிற்சி இன்றி பணியாற்றி வருகின்றனர். சுமார் பத்து சதவீதப் பள்ளிகள் ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகின்றன.ஆசிரியர்களை ஆண்டு தோறும் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் நம் நாட்டின் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை என்னவாக இருக்கும் எனமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேசிய நுழைவுத்தேர்வு நடத்த ஆலோசிக்கப்படுகிறது.
என்சிடிஇ அமைப்பின் அங்கீ காரம் பெற்று நாடு முழுவதிலும் சுமார் 18,000 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், பி.எட்., எம்.எட்., பகுதிநேர பி.எட். மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றுக்கான கல்வி அளிக்கப்பட்டு வருகின் றன.
இதற்கான மாணவர்கள் சேர்க்கை முறையை அந்த நிறுவனங்களிடமே விடப்பட்டுள்ளன. எனினும், ஒருங்கிணைந்த பி.எட். கல்விக் கான சேர்க்கையில் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டு விட்டால், மற்ற கல்விகளுக்கும் இதை மத்திய அரசு வலியுறுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...