தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி
வால்பாறையில் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில்
கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியரிடம் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோர் அளித்த மனு:
தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வேண்டும்.
சமஸ்கிருத மொழித் திணிப்பை கைவிட்டு அந்தந்த மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு
வழிவகை செய்ய வேண்டும். கல்வியாளர்கள், சட்டம், பல்துறை நிபுணர்களைக் கொண்ட
புதிய வரைவுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவில் தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர்இடம்பெற
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...