பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த
விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.
நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக் காமல் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்களுக் கெல்லாம் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர் சனமான உண்மை.
தேசிய வழிகாட்டி சேவை
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 5 சுமை தூக்குவோர் பணியிடங்களுக்காக அரசுத் தேர் வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்தனர். இந்தப் பணியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எம்.ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள், 12-ம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், 10-ம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர், அதற்கும் குறைவான பள்ளிப்படிப்பை முடித்த 177 பேர் என 2,424 பேர் விண்ணப் பித்திருந்தனர்.
இப்படி அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Carrier Service (தேசிய வழிகாட்டி சேவை) இணைய தளத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது படித்த பட்டதாரிகளின் தகவல்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகங்களிலும் இந்த இணையத்தின் மூலம் இடம்பெறச் செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். அந்தத் தகவலைக் கொண்டு வேலை தேடுபவர் வேலை பெறலாம்.
பட்டதாரிகள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் என்ன மாதிரியான வேலையை, எந்தத் துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித் தால் தொடர்புடைய அரசு மற் றும் தனியார் வேலைவாய்ப்பு களை விண்ணப்பதாரரின் செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவலாக தருகிறார்கள்.
வேலை வழிகாட்டி பணி
இது தொடர்பாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் கூறியது:
படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தேசிய வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல் கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.
இணையத்தில் பதிவு செய்ய..
இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத் தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ளூர் சேவை, பணித்திறன் பயிற்சிகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பெறலாம்.
இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம் என்றார்.
இந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம். ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விளக்கம் தருகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...