தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும்;
ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர்.
இதுவரை, 70 லட்சம் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தை பெயர், புகைப்படம் ஆகியவை ஒப்பிடப்படுகிறது. அப்போது, ஒரே நபரின் பெயர், பல இடங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் விபரம் தனியே பட்டியலிடப்படுகிறது. அதேபோல், முகவரி மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இப்பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வரும், 15ம் தேதி ஒப்படைக்கப்படும்.
அவர்கள் வீடு வீடாகச் சென்று, அப்பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் இருப்பது உறுதியானால், வாக்காளர் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் பெயரை நீக்குவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...