திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி வடகரையில் அமைந்துள்ளது. இங்கு 921
மாணவர்கள், 48 ஆசிரியர்கள் உள்ளனர். திருப்புவனம், பூவந்தி, மடப்புரம்,
ஏனாதி, அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். சமீப காலமாக மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல் அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மோதிக் கொள்வதுடன் வெளி நபர்களை அழைத்து வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று காலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சக மாணவர்கள் விலக்கி விட்டுள்ளனர். உணவு இடைவேளையின் போது மாணவர் ஒருவர் தனது சகோதரருக்கு போன் செய்து பள்ளியில் சக மாணவன் கேலி செய்தது தொடர்பாக கூறியுள்ளார். உடனே அங்கு வந்த மாணவரின் சகோதரர்,மற்றொரு மாணவரை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். ஒரு சில சம்பவங்கள் மட்டுமே போலீசில் புகார் செய்யப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பேசி முடிக்கப்படுவதால்
மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து மோதலில் ஈடுபடுகின்றனர். போலீசார் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...