'குடிநீர் தர பரிசோதனை பணிகளில்ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படும்,' என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின், நீர் ஆதாரங்களில் தரத்தை உறுதிப்படுத்தும் வகை யில், நீர் தர பரிசோதனை பணிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்த ஜனவரியில் முதல் கட்ட குடிநீர் தர பரிசோதனை பணிகள் நடந்தது. இரண்டாம் கட்டமாகஇன்று முதல் ஊராட்சி, பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குடிநீர் பரிசோதனை பணிகளில் ஈடுபடவுள்ளனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கூறியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளை தவிர வேறுபணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என, கல்வி உரிமைச்சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், பலதரப்பட்ட பணிகள் ஒதுக்கப்படுகிறது.
தற்போது, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடத்தப்படும் பரிசோதனை பணிகளும் கடந்தநான்கு ஆண்டுகளாக திணிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பித்தல்கற்றல் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உதவவேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...