சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.
சென்னை
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல்
மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற
கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில்
குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல
இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டான்.
கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அவன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார், 24 நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவன்; பி.இ., பட்டதாரி. வேலை
தேடி சூளைமேடில் தங்கியிருந்த ராம்குமார், சுவாதியை ஒருதலையாக
காதலித்துள்ளான். கடந்த 3 மாதங்களாக முயற்சித்தும் சுவாதி காதலை ஏற்காததால்
வெறுப்படைந்த ராம்குமார் நண்பன் ஒருவன் உதவியுடன் கொலை செய்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. கொலையாளி ராம்குமாரை சென்னை கொண்டுவர உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய்,
சகோதரி உள்ளிட்ட 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
அறுவை சிகிச்சை:ராம்குமாரின்
கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...