31 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லாபஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தபோது எடுத்த படம். 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 18-7-2016 அன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில், 2016-2017-ம் கல்வி ஆண்டில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகளை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், மிதிவண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 31 லட்சம் பேர் பயனடைவார்கள் அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த 2015-2016-ம் கல்வி ஆண்டில் 480 கோடி ரூபாய் செலவில் 28 லட்சத்து 5 ஆயிரத்து 578 மாணவ, மாணவியர் கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகளை பெற்று பயனடைந்தனர். 2016-2017-ம் கல்வியாண்டில் 504 கோடி ரூபாய் செலவில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டைகளை பெற்று பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பா.ராம மோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) ச.வி.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...