ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை திருத்தி அமைக்க
நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.தமிழகத்தில்
600-க்கும் மேற் பட்ட கல்வியியல் கல்லூரிகளும், 300-க்கும் மேற்பட்ட
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.
கட்டணம் நிர்ணயம் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கலந்துஆலோசித்து கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கல்விக் கட்டணம் 2012-13, 2013-14, 2014-15 என 3 கல்வி ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் 2014-15-ம் கல்வி ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், கடந்த ஆண்டு பிஎட், எம்எட் படிப்புக்காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக மாற்றப்பட்ட காரணத்தினாலும் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்க சற்று தாமதமான தாலும் கட்டணம் திருத்தியமைக் கப்படவில்லை.
3 ஆண்டுகளுக்குஇந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அதாவது 2016-2017, 2017-18, 2018-19-ம் ஆண்டுகளுக்கு ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட் டணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது. அதன்படி, கடந்த 2015 மார்ச் மாதம் முதல் சென்ற பிப்ரவரிமாதம் வரையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் களுக்கு செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட செலவின விவரங் களை ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் களுக்கும் நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகளிட மிருந்து செலவின விவரங்களைப் பெற்ற பின்பு, கட்டண நிர்ணயம் தொடர்பாக அவர்களிடம் இந்த கமிட்டி ஆலோசனை நடத்தும். அதன்பிறகு, நடப்பு கல்வி ஆண்டு முதல் அடுத்த 3ஆண்டுகளுக்குப் புதிய கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
தற்போதைய கல்விக் கட்டணம் எவ்வளவு?நீதிபதி என்.வி.பாலசுப்பிர மணியன் கமிட்டியால் நிர்ணயிக்கப் பட்டு தற்போது தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம்படிப்புகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...