உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சி.எச். ஆகிய
படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 189 இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு படித்தவர்கள் 166 உள்பட மொத்தம் 836 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், நுழைவுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. இதற்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை
www.tnhealth.org என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மாத இறுதியில் மாணவர் சேர்க்கை
நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...