Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கை தமிழக அரசு வெளியீடு

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் விபரப்பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர், மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் 42 லட்சத்து 72 ஆயிரத்து 41 பேர் பெண்களாகும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் 18 லட்சத்து 24 ஆயிரத்து 342 பேர் எஸ்.சி. இனத்தவர். அவர்களில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 107 பேர் பெண்கள். மொத்த காத்திருப்போரில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 784 அருந்ததியர் உள்ளனர். அவர்களில் 98 ஆயிரத்து 4 பெண்கள். அதுபோல், மொத்த பட்டியலில் 63 ஆயிரத்து 898பேர் எஸ்.டி. இனத்தவர் உள்ளனர், (பெண்கள் 29 ஆயிரத்து282). 
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் 22 லட்சத்து 498 பேர் எம்.பி.சி. பிரிவினர் (பெண்கள் பத்து லட்சத்து 89 ஆயிரத்து 748).அதுபோல் மொத்த பட்டியலில் உள்ளவர்களில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 653 இஸ்லாமியர்கள். அதில் ஒரு லட்சத்து61 ஆயிரத்து 825 பேர் பெண்கள். பிற்படுத்தப்பட்டோர்34 லட்சத்து 53 ஆயிரத்து 868 பேர் உள்ளனர். அவர்களில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 160 பேர் பெண்கள். வேறு பிரிவினர் 2 லட்சத்து 67 ஆயிரத்து 81 பேர் உள்ளனர். (பெண்கள் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 915).இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive