இனி, கல்வி உதவித்தொகை உட்பட, அனைத்து வகையான உதவியும், வங்கி கணக்கு
வாயிலாகவே வழங்கப்படும்.எனவே,பள்ளி,கல்லூரி மாணவ - மாணவியர் அவசியம் வங்கி
கணக்கு துவக்க வேண்டும் என,அறிவுறுத்தப்படுட்டுள்ளது.
இதற்கு,தாலுகா வாரியா சிறப்பு முகாம் நடத்த,மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியருக்கும்,தொழிற்கல்வி பயில்வோருக்கும்,தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக,கல்வி உதவி வழங்கப்படுகிறது.மத்திய அரசு வழிகாட்டுதலின் படி,இத்தொகை வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோல்,திருமண நிதியுதவி,மகப்பேறு நிதியுதவி,அரசு திட்டங்களுக்கான மானியம் என,அனைத்து வகையான அரசு மானியமும்,நிதியுதவியும்,வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே வழங்கப்படுகிறது.
அதனால்,வங்கி கணக்கு வைத்துள்ள மாணவ,மாணவியர் மட்டுமே எளிதாக கல்வி உதவித்தொகை பெற முடியும்.ஆனால்,பள்ளி மாணவ,மாணவியருக்கு பெற்றோர் உதவி இருந்தால் மட்டுமே,வங்கிகளுக்கு சென்று கணக்கு துவங்க முடிகிறது. பள்ளி விடுமுறை நாட்களில்,வங்கிகளுக்கும் விடுமுறை என்பதால்,கணக்கு துவக்குவது தொடர்ந்து தள்ளிப்போகிறது. அதிகம் படிக்காத பெற்றோர்,தங்களது குழந்தைகளுக்கு கணக்கு துவக்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே,மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பெற்றோர் தரப்பில் கூறுகையில்,ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும்,வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவி வழங்கப்படுகிறது;கணக்கு துவங்குவது கஷ்டமானதாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு,தாலுகா வாரியாகசிறப்பு முகாம் நடத்தி,கணக்கு துவக்கிக் கொடுக்க வேண்டும். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு எளிய வழிகாட்டுதலுடன்,விரைந்து துவக்க உதவிட வேண்டும்என்றனர்.முன்னோடி வங்கி அதிகாரிகளை கேட்டபோது,பள்ளி பருவத்தில் இருந்தே,வங்கி கணக்கு பயன்படுத்த கற்றுத்தர வேண்டும். வங்கி கணக்கு துவக்கினால் மட்டும் போதாது;தொடர்ந்து பயன்படுத்தி வர,பள்ளிகள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.
வங்கி கணக்கு இருந்தால்,ஆண்டுக்கு, 12ரூபாய்செலுத்தி,ஓராண்டுக்கு,இரண்டு லட்சம் ரூபாய் அளவிலான காப்பீடு பெற முடியும்.மேலும், 330ரூபாய் செலுத்தினால்,மத்திய அரசின் மற்றொரு திட்டத்தில்,ஆண்டுக்கு,இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு சேவையை பெற முடியும். வங்கி கணக்கு இருப்பதன் மூலம்,மாணவர் கள் பல வகையில் நன்மையடைய முடியும்என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...