சேலம்;'பள்ளி
குழந்தைகளுக்கு தினமும் பால் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்
சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில்,
மாநில தலைவர் செங்கோட்டுவேல் பேசியதாவது: உற்பத்தியாகும் பாலை முழுவதும்
கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு, தினமும் பால் வழங்க
வேண்டும்.நிலுவையில்லாமல், பால் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும். உற்பத்தி
செலவு, 30 சதவீதம் உயர்ந்துள்ளதால், பசும்பால் லிட்டருக்கு, ஐந்து ரூபாய்,
எருமைப்பால் லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும். ஆவின் நடவடிக்கை
அனைத்தும், தனியார் பால் நிறுவனங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக
உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...