1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “நல்ல தொடுதல்” (Good
touch), “கெட்ட தொடுதல்” (bad touch) எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக்
கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய்
தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம்
தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ பொருட்கள் மிகுதியாகவோ,
இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிறகுழந்தைகளுடனோ அனுப்பினால்,
அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு
முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து,
மரியாதையின்றி பேசுவதும், தொடக்கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில்
நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்தங்கள்.
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன்
மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை,
களவுப்போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ
பார்க்காதீர்கள் !
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல்,
குழந்தைகளுக்கு பிடித்தாற் போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு
பெருகவகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள் !
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை
சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு
பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில்
Good points
ReplyDeleteNICE AND THATS TRUE
ReplyDelete