தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை
திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்'
செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது
பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும்
விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
*.டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாது
*.விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம்போடக்கூடாது
*.வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்
*.கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்
*.செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை
*.மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்
*.ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது
*.கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்
*.அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது
*.தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.
இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...