மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை
என்றால் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு
அமல்படுதியுள்ளது.
"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை
பாதுகாப்பு திட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த
வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, இருசக்கர வகன ஓட்டிகள்
தலைக்கவசம் அணியாமால் பயணம் செய்வது பற்றி கவலை தெரிவித்தார். மேலும், சாலை
விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால்
பெட்ரோல் இல்லை என்ற புதிய விதியை கொல்கத்தா போலீசார்
அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, கொல்கத்தாவில் ஹெல்மெட்
அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என போலீசார்
தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில்
அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.
கேரளாவின் சில நகரங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...