தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற
வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம்
கிடைக்கும் அறிதலே.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நூலை வாசித்திருந்தேன். அதில் நீங்கள் ஒரு விடயத்தை அதிகமாக யோசித்தீர்கள் என்றால் மூளையில் இருந்து அந்த எண்ண அலைகள் இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும்.
பிரபஞ்சத்தில் சுத்திக் கொண்டிருக்கும் அதே ஒத்த எண்ண அலைகள் உங்கள் மூளைக்கு வந்து சேரும். இதுதான் அந்த புததகத்தில் இருந்த அடக்கம்.
சில நாளைக்கு முன்பு தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். குறள் இதுதான்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
- ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
அந்த வாரம் முழுவதும் அந்த குறளைப் பற்றிய சிந்தனையே சுழன்று கொண்டிருந்தது. அதை ஒட்டி திருமூலர் சொன்ன "உணவே மருந்து .... மருந்தே உணவு" என்ற வாக்கியமும், "நொறுங்க தின்றால் நூறு வயது" என்ற பழமொழியும் வந்து போனது. நோயற்ற வாழ்வுக்கு தமிழ் நூல்கள் சொல்வது எல்லாம் கீழே சொல்லப்பட்ட மூன்று பொறிமுறைகள் தான்..
1. பசி வந்தபின்புதான் உணவு உண்ண வேண்டும்
2. உண்ணும் பொருளை நன்கு மென்று மாவாக்கி பிறகு விழுங்க வேண்டும்
3. அளவாக உண்ண வேண்டும்.
realised words
ReplyDeleterealised words
ReplyDelete