மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் செலவினங் கள் தொடர்பாக கண்காணிக்க, உதவி செலவின பார்வையாளர் களைக் கொண்ட குழு, தொகுதி தோறும் அமைக்கப்பட்டது. இதில் மத்திய தலைமை கணக்காளர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மொத்தம் 41 நாட்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கு உதவி யாக வீடியோ பார்வையிடும் குழு, வீடியோ நிலைக்குழு, நிலைக் கண்காணிப்புக் குழு, பறக்கும் படை என 4 விதமான குழுக்கள் பணியாற்றின.தேர்தல் நடக்கும் நாளில் மாநில அரசுப் பணியாளர்கள் வாக்குச் சாவடி அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் என நியமிக்கப்பட்டனர். இது தவிர, நுண் பார்வையாளர் கள் என வாக்குச்சாவடி அமை விடத்தில் நியமிக்கப்பட்டனர். இவர் களுக்கு அன்று ஒரு நாளுக்கான ஊதியம் அன்றே வழங்கப்பட்டுவிட்டது.ஆனால், உதவி செலவின பார்வையாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றிய குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் 16 தொகுதிகளுக்கான உதவி செலவின பார்வையாளர்களுக்கு இன்னும் ஊதியம் வரவில்லை. தேர்தல் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை ஊதியம் வழங்கப்படாத தற்கான காரணம் தெரியவில்லை.ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த மாநகராட்சி ஆணையர் சந்திர மோகனும் மாறிவிட்டார். தேர்தல் ஆணைய இணையதளத்தில் வேட் பாளர்கள் செலவுக் கணக்கு தகவல் களும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு இதுவரை ஊதியம்வழங்கப்படவில்லை. இதே நிலை தமிழகத்தின் பல பகுதிகளிலும்உள்ளது. தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இதில் தலையிட்டு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக தேர்தல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,‘‘மற்ற துறையினருக்கு உட னடியாக ஊதியம் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும்’’ என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...