ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை ஜூலை இறுதிக்குள் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்
சனிக்கிழமை நடைபெற்றது. கென்னடி நினைவு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில்
நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ப.தெய்வசிகாமணி தலைமை
வகித்தார். மாவட்ட தலைமை நிலையச் செயலர் சி.சகாயதொபியாசு முன்னிலை
வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் அ.வின்சென்ட்பால்ராஜ்
கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: ஒளிமறைவற்ற பொது மாறுதல்
கலந்தாய்வு நடத்துவதை உறுதி செய்யும் வகையில், ஜூலை மாத இறுதிக்குள்
அராசணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதற்கான
குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த சாந்தஷீலா நாயர், தமிழக முதல்வரின்
முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்து
விரைவாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை தேர்தல்களை, ஆகஸ்டில்
தொடங்கி, செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு
செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...