அரசு
வேலைக்காக, 1 லட்சம் ரூபாய் வாங்கி, போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்துணவு
அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி
பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன், 53. அங்குள்ள அங்கன்வாடியில், சத்துணவு
அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்,
சில மாதங்களுக்கு முன், சின்னசந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி
ஜானகிக்கு, சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்.
இதற்காக ஜெயக்குமாரிடம், 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், சொன்னபடி
வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து, ஜெயக்குமார் கேட்டதற்கு, அவரிடம் பணி
நியமன ஆணை ஒன்றை ராஜராஜன் வழங்கினார். பள்ளிக்கு கொண்டு சென்றபோது, அதை
சரிபார்த்த அலுவலர்கள், போலி ஆணை என்று தெரிவித்தனர்.ஜெயக்குமார் புகாரை
அடுத்து, களம்பூர் போலீசார், ராஜராஜனை கைது செய்து, விசாரணை நடத்தி
வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...