விரும்பிய ஒரு கருத்தை யாருடைய குறுக்கீடும்
இல்லாமல் தெரிவிக்க விரும்பினால், தடையேதும் ஏற்படுத்தாமல், அதை ஏற்று
கொள்வது சமூக வலைதளம் மட்டுமே சாத்தியம். பிரத்யேக "மெயில் ஐ.டி', செல்போன்
எண் இருந்தால் போதும், "பேஸ்புக்'கில் கணக்கு துவங்கலாம்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பலர்
விளையாட்டாக பேஸ்புக்கில் கணக்கு துவக்கி, விரும்பத்தகாத பிரச்னைகளில்
சிக்கி கொள்கின்றனர். சென்னையில் ஸ்வாதி கொலை, சேலத்தில் வினுபிரியா
தற்கொலை உள்ளிட்டவை இதற்கு உதாரணம். பயன்படுத்த தெரிந்தவர்கள் தங்கள்
புகைப்படம், விரிவான முகவரியை பதிவு செய்யாமல், இஷ்டத்துக்கு கருத்து
தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், பெண்கள் மற்றும் குடும்பத்தினர்
புகைப்படங்களை பதிவு செய்து, அறிமுகம் இல்லாத நபர்களின் படங்களுக்கு "லைக்'
கொடுத்து, விரும்பத்தகாத கருத்தை தெரிவிக்கின்றனர். முன்பின், தெரியாத
நபர்களிடம் "சாட்' செய்து பிரச்னையை விலை கொடுத்து வாங்குகின்றனர். மனம்
சஞ்சலப்பட்டு, பிரச்னையாக மாறி, குடும்ப அளவிலும், நண்பர்கள் மத்தியிலும்
மனமாச்சர்யம் ஏற்படுகிறது.
பிரச்னைகளை சந்திக்கும் போது, அதனை எளிதாக
சமாளித்து நகர்ந்து செல்பவர்களை விட, அதீத மன அழுத்தத்தால், தவறான
முடிவுக்கு பலர் முயற்சிக்கின்றனர். பிரச்னையை தவிர்த்து, முன்னெச்சரிக்கை
நடவடிக்கை மேற்கொள்ள, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில், போலீசார் புதிய
முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அதற்கென, தனிக்குழு அமைத்து, பள்ளி கல்லூரி
மாணவர்களுக்கு "சைபர்' குற்றம் குறித்த பாடம் நடத்த, திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதிக்கும் இன்ஸ்பெக்டர், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தார், பெற்றோர் இணைந்து குழு அமைக்கப்பட உள்ளது.
வாரந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில்
விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியர் "சைபர்' குற்றங்களில்
சிக்காமல் இருக்க அறிவுரை வழங்குவது, இதன் முக்கிய அம்சம்.
"டாலர் சிட்டி'யான திருப்பூரில், வட
மாநிலத்தவர், பிறமாவட்டத்தார், வெளிநாட்டினர், நைஜீரியர் என அனைத்து
தரப்பினரும் தங்கியுள்ளனர்; வாடகை, காம்பவுண்ட் வீடு, வீட்டில் தாய், தந்தை
இருவரும் பணிக்கு செல்வது, என வாழ்க்கை சூழலில் பல மாறுபடுகள் உள்ளன.
திருப்பூரிலும், பள்ளி, கல்லூரியில் "சைபர்'
குற்றம் குறித்த வகுப்பு துவங்க முன் வந்தால், மாணவர்கள் நல்வழியில்
பயணிப்பதுடன், இவ்வகை குற்றம் குறைய வாய்ப்பு உருவாகும்
Sir frist all TN Govt School implement for Computer course at all section than automatic improve knowledge than technical illegal problems avoided peoples .
ReplyDeleteTN Goverment free laptop impliment for school stutends but no use(No of students illegal use this laptop), so the broblems avoid for technology improved for computer uses awareness
Dear Sir. 1st அனைத்து தமிழக அரசு பள்ளி தானியங்கி விட அனைத்து பிரிவில் கம்ப்யூட்டர் கோர்ஸ் செயல்படுத்த தவிர்க்கப்பட ஜனங்களின் தொழில்நுட்ப சட்டவிரோத பிரச்சினைகளை விட அறிவை மேம்படுத்த.
ReplyDeleteபள்ளி stutends க்கான தமிழக அரசு நடத்தி வரும் இலவச லேப்டாப் impliment ஆனால் எந்த பயனும் (மாணவர்கள் சட்டவிரோத பயன்பாடு இந்த லேப்டாப் இல்லை), அதனால் broblems மேம்படுத்தலாம் தொழில்நுட்பம் தவிர்க்க கணினி விழிப்புணர்வு பயன்படுத்துகிறது