செய்யாறு பகுதியில் ஒற்றை இலக்க எண் மாணவர்கள் எண்ணிக்கையோடு 3 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாடியநல்லூர்
கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே
படித்து வருவதாக தெரிகிறது. ஒரு மாணவி மட்டுமே படித்து வரும் இப்பள்ளியினை
அரசாங்கம் மூடுவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் வசித்து வரும்
பழங்குடியின இனத்தைச் சேர்ந்த (எஸ்.டி.) இரு குழந்தைகளை வருகை
பதிவேட்டிற்காக சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இப்பள்ளியில் படித்து வரும் 3 மாணவர்களுக்காக ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் வீதம் பணியில் உள்ளனர்.
செய்யாறு வட்டம், பின்னப்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 9
மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதேபோன்று, கடுகனூர் கிராமத்தில்
உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 5 மாணவர்கள் மட்டுமே பயின்று
வருகின்றனர்.
இப்பள்ளியில் தொடர்ந்தாற் போல் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றை இலக்க எண்களில் மாணவர்கள் படித்து வரும் அவல நிலை தொடர்கிறது.
செய்யாறு ஒன்றியம், மங்கலம் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்
தொடர்ந்தாற் போல் 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த
மாணவர்களும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அருகில் சுமார் ஒரு கி.மீ.
தொலைவில் வசித்து வரும் தலித் மாணவர்கள் மற்றும் பழங்குடி இனத்தவராவர்.
இவர்களுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வாகன வசதி ஏற்பாடு
செய்யப்பட்டு அழைத்து வரப்படுகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர்
இருந்தபோதிலும், சொந்தக் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் சேராமல்
நகர்ப்புறமான செய்யாறில் உள்ள தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள்
சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
34 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் அனக்காவூர் ஒன்றியம், பழஞ்சூர் கிராமத்தில்
உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை 34
மாணவர்கள் படித்து வருவதாகத் தெரிகிறது. இவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே
நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...