Home »
» கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்கவேண்டும் கல்லூரி முதல்வர்களுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை.
சென்னை,உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலை அறிவியல்
கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி
முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது.
தமிழ்நாடு கலைக்கல்லூரிகளின் இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கையை அரசு,
அரசு உதவி பெறும், சுயநிதி கலைக்கல்லூரிகளில் உள்ள அனைத்து
முதல்வர்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது:-தற்கொலையை தடுக்க அரசு முன்வந்துள்ளதுகல்லூரிகளில்
படிக்கும் மாணவ-மாணவிகள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி அதன்
பொருட்டு தவறுகள் செய்ய நேர்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பது உள்ளிட்ட
விபரீத முடிவுகளை எடுப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது.எனவே இவற்றை
தடுக்க அரசு முன் வந்துள்ளது. தவறு செய்வதினால் அளிக்கப்படும் சிறிய
தண்டனைகள் கூட மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.
அதன் காரணமாக மாணவச்செல்வங்களை இழந்து வாடும் குடும்பங்களின் இழப்பை
எதுவும் ஈடுகட்ட முடியாது. எனவே இத்தகைய விபரீத முடிவுகளை தடுக்கும்
பொருட்டும் மாணவ-மாணவிகளின் மன உளைச்சலை போக்க கீழ்காணும் நெறிமுறைகளை
கையாளுமாறு கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.அதன் முக்கிய
அம்சங்கள் வருமாறு:-உளவியல் ஆலோசகர்* ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பயிலும்
மாணவ-மாணவிகளுக்கு பொறுப்பாசிரியர் ‘டியூட்டோரியல் சிஸ்டம்’-ன் கீழ்
நியமிக்கப்படுதல்.* மாணவ-மாணவியரில் அதிக நாட்கள் விடுப்பு எடுப்பவர்களை
கண்காணித்து விடுப்பு எடுக்காவண்ணம் உரிய அறிவுரைகள் வழங்குதல்.* தேர்வு
எழுத தேவையான குறைந்தபட்ச வருகைப்பதிவு இல்லையென்றால் எக்காரணம் கொண்டும்
அவர்கள் தேர்வுகள் எழுத அனுமதிக்க முடியாது என்பதை கல்வி ஆண்டின்
தொடக்கத்திலேயே சுற்றறிக்கை மற்றும் ஆசிரியர்கள் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு
தெரிவித்தல்.* உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில்
மாணவ-மாணவிகளிடம் இணக்கமாக பேசி ஆற்றுப்படுத்தும் திறன்கொண்ட ஆசிரியர்
ஒருவரை ‘உளவியல் ஆலோசகராக’ நியமிக்கவேண்டும். அவரது செல்போன் எண்ணிலும்
மாணவ-மாணவிகள் எண்ணில் ஆலோசனை பெறும் வகையில் அவர் செயல்படுதல்.பெற்றோரை
அழைத்து பேச வேண்டும்* வருகைப்பதிவு மிகக்குறைவாக உள்ள மற்றும்
பிரச்சினைகள் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோரை அழைத்து அதுபற்றி
அவர்களுக்கு தெரிவித்தல்.விடுதியில் தங்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோரை
மாதம் ஒரு முறை கல்லூரி விடுதிக் காப்பாளர் அழைத்துபேசவேண்டும். பெற்றோரை
அழைத்து வரவேண்டும் என்று சொல்வதில் கூட கவனமாக இருக்கவேண்டும். பெற்றோரை
அழைத்து வர சொல்கிறார்களே என்று விபரீத முடிவுகளை எடுக்கும் மாணவர்களும்
உண்டு.சிறப்பு பயிற்சி* ஒரு சில மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான
காரணம் சரியான முடிவுகள் அல்லது எதிர்பார்த்த முடிவுகள் பெற முடியாததே
ஆகும். இதனையும் கண்காணித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்தல்
நல்லது.* கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பஸ் வழித்தடத்தில்
ஏற்படும் மோதல்கள், கல்லூரி வளாகத்தின் உள்ளேயே ஏற்படும் மூத்தவர்-இளையவர்
(சீனியர்-ஜூனியர்) பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு பெரிய
பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் தீர்த்தல்.இரைச்சலுடன் வாகனங்களை.....* கல்லூரி
வளாகத்தின் உள்ளே மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பெரும்
இரைச்சலோடு ஓட்டிச்செல்லுதல் மற்றும் அதன் மூலம் கல்வி சூழலுக்கு பாதகமான
சூழல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...