வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில்
("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,
சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை
குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான (2015-16) வருமான
வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி
தலைமை அலுவலகத்தில் சிறப்புக் கவுன்ட்டர்கள் வியாழக்கிழமை முதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) வரை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை
செயல்படும்.
இந்தச் சேவையை வருமான
வரித் துறை (தமிழ்நாடு-புதுச்சேரி) முதன்மை தலைமை ஆணையர் ஏ.கே.ஸ்ரீவத்ஸவா
தொடக்கி வைத்தார். முதல் நாளில் 1,500-க்கும் மேற்பட்டோர் வருமான வரிக்
கணக்கை தாக்கல் செய்தனர்.
ஜூலை 31 கடைசி: வருமான வரி கணக்கைத் தாக்கல்
செய்ய ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும். இந்த நிலையில், சம்பளதாரர்கள்
உள்ளிட்ட ஏராளமானோர் மின்னணு முறையில் ("இ-ஃபெயிலிங்') தாக்கல்
செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...