பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில்,
அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை
அண்ணா பல்கலை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆர்கிடெக்ட்
என்ற, கட்டட வடிவமைப்பு தொடர்பான பி.ஆர்க்., படிப்புக்கு, அண்ணா பல்கலை
மூலம், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ளன. மத்திய
அரசின் ஆர்கிடெக்ட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, இந்த கல்லுாரிகள்
இயங்குகின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு,
அண்ணா பல்கலை யின் கவுன்சிலிங் மூலம் மாணவர் கள்
சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், நாளை மறுநாள்
நடக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில், 41 கல்லுாரிகள் கவுன்சிலிங்கில்
பங்கேற்றன. இந்த ஆண்டு புதிதாக சில கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளதாக
கூறப்படுகிறது. மொத்தம் எத்தனை கல்லுாரிகளுக்கு, ஆர்கிடெக்ட் கவுன்சில்
அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவற்றில், எத்தனை கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை
இணைப்பு வழங்கப்பட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றன என்ற விபரங்களை,
பல்கலை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல, கவுன்சிலிங்குக்கான இட
ஒதுக்கீட்டை நிர்வகிக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககமும்,
கல்லுாரிகளில் எத்தனை இடங்கள் இந்த ஆண்டு, கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்பட
உள்ளன என்ற பட்டியலை, பல்கலை இணையதளத்தில்
வெளியிடவில்லை. அதனால், இந்த ஆண்டு பி.ஆர்க்., சேர விண்ணப்பித்துள்ள
மாணவர்கள், கல்லுாரிகளின் பெயர் விபரம், கட்டண விபரம், இடங்களின்
எண்ணிக்கை, தேர்ச்சி மற்றும் செயல்பாட்டு திறன் தெரியாமல் தவிக்கின்றனர்.
அதேநேரத்தில், பி.ஆர்க்., நடத்தும் தனியார் கல்லுாரிகள், இடைத்தரகர்கள்
மூலம், பல லட்சம் ரூபாய் நன்கொடை பேரம் பேசி இடங்களை விற்று வருவதாகவும்
புகார் எழுந்துள்ளது.
பி.ஆர்க்., கல்லுாரி பட்டியல் வெளியிட்டால் மட்டுமே, கவுன்சிலிங்குக்கு
முன், கல்லுாரிகளை விசாரித்து, எதில் சேர்வது என, மாணவர்கள் முடிவு செய்ய
முடியும். இந்த விபரங்களை தராமல் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதால், தனியார்
கல்லுாரிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...