Home »
» திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் கலெக்டர் தகவல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச
திரைப்படம் காண்பிக்கப்படும் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.
ஆலோசனை
கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தின்
சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும்
வகையில் தியேட்டர்கள் மூலம் குழந்தைகள் திரைப்பட விழா நடத்துவது குறித்த
ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது.அப்போது கலெக்டர்
பேசியதாவது:– இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின்
மூலம் 2016–ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாட்டில்
திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி
மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வாரம் தியேட்டர்கள் மூலம் குழந்தைகள்
திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது.இலவச திரைப்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 3–வது வாரம் குழந்தைகள் திரைப்பட
விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களில்
காலை 9 மணி முதல் 11 மணி வரை குழந்தைகள் திரைப்பட விழா நடத்தப்படும்.அதில்,
இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள்
தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு
காண்பிக்கப்படும்.பத்திரமாக...
திரைப்படம் திரையிட்டு காண்பிக்கும் தியேட்டர்களின் செயல்பாட்டு செலவிற்காக
ஒரு காட்சிக்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணமாக அளிக்கப்படும். மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் தியேட்டர்கள் அருகில்
உள்ள பள்ளி மாணவர்களை பத்திரமாக அழைத்து சென்று வருவதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்.மேலும், பள்ளி மாணவர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வருவதற்கு
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
குழந்தைகள் திரைப்பட விழாவின் பொறுப்பு அலுவலராக செயல்படுவார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும்
குழந்தைகள் திரைப்பட விழாவினை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்பட
சங்கத்தின் உதவி வினியோக அலுவலர் வி.எஸ்.அகிலா, திரையரங்குகளின்
பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...