நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பட்டப்
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் - ஆப் மதிப்பெண்கள்
புதன்கிழமை வெளியிடப்பட்டன.இதுகுறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக
மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் வெளியிட்ட செய்திக்
குறிப்பு :
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில், இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதியும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 23-ஆம் தேதியும் நடைபெறுகிறது.இந்தக் கலந்தாய்வுக்கு, கீழ்க்கண்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இளநிலை மீன்வள அறிவியல் : பொதுப் பிரிவினர் - 192. பிற்படுத்தப்பட்டோர் - 187. பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் - 175. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 185.75. பட்டியல் இனத்தவர் - 180. பட்டியல் இனத்தவர் அருந்ததியினர் - 172. பழங்குடியினர் - 161.25. மாற்றுத் திறனாளிகள் - 111.5. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் - 185. தொழில் கல்வி (மீன்வளம்) - 130. தொழில் கல்வி (மேலாண்மை) - 160.5. விளையாட்டு வீரர்கள் - 175.
இளநிலை மீன்வளப் பொறியியல் : பொதுப் பிரிவினர் - 191.5. பிற்படுத்தப்பட்டோர் - 188.25. பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் - 177. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 187. பட்டியல் இனத்தவர் - 184. பட்டியல் இனத்தவர் அருந்ததியர் - 168. மாற்றுத் திறனாளிகள் - 120.75.கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 564 மாணவ, மாணவிகளும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 169 மாணவ, மாணவிகளும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...