ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், மகளிருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
என மாநில மகளிர் ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில மகளிர் ஆசிரியர்
நலச்சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர்
கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொதுச் செயலர்
சாந்தி, பொருளர் ரோஜாவதி, அமைப்புச் செயலர் லட்சுமி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
பொது இடமாறுதல் கலந்தாய்வில் தம்பதியர் அரசுப் பணியில் இருந்தால்,
கலந்தாய்வில் முன்னுரிமை பணிக் காலத்தில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட
வேண்டும். முதிர் கன்னியர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டவர், மணவிலக்கு
பெற்றவர், தனியார் துறையில் பணியாற்றும் கணவர் அல்லது மனைவி, இந்தப்
பிரிவுகளில் உள்பட்டவர்களுக்கு பொது மாறுதலில் சிறப்பு முன்னுரிமை வழங்க
வேண்டும். நகர்ப்புற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குப்
பின் சுழற்சி முறையில் கிராமப்புற பள்ளியில் பணியாற்ற அரசாணை வெளியிட
வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...