தமிழ் புத்தாண்டை, சித்திரை மாதம் கொண்டாட உத்தரவிட்டதோடு, அரசு விழாவாக
நடத்தி விருது வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இந்த
ஆண்டும், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மரபுச் செய்யுள், கவிதை படைப்புகளை புனைந்து வழங்குபவருக்கு, கபிலர் விருது; கல்வெட்டுகள், அகழாய்வு,ஓலைச்சுவடிகள் பதிப்பு ஆகியவற்றை மேற்கொள்பவருக்கு, உ.வே.சா., விருது; கம்பரைப் பற்றி திறனாய்வு செய்வோருக்கு, கம்பர் விருது; சிறந்த இலக்கிய பேச்சாளருக்கு, சொல்லின் செல்வர் விருது வழங்கப்படும்.தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வருபவருக்கு, உமறுப்புலவர் விருது; தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் மொழி பெயர்ப்பாளருக்கு, ஜி.யு.போப் விருது; இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ, சிலப்பதிகாரம் புகழ் பரப்புபவருக்கோ, இளங்கோவடிகள் விருது; மகளிர் இலக்கியங்களை படைப்பதில், தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளருக்கு, அம்மா இலக்கிய விருது; சிறந்த தமிழ் அமைப்புகளுக்கு, தமிழ்த்தாய் விருது வழங்கப்படும்.
விருது பெற விரும்புவோர், தமிழ் வளர்ச்சித் துறையின்,tamilvalarchithurai.comஎன்றஇணையதளத்தில், விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிப்போர், தன் விவரக் குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்கள் விவரத்துடன், அவற்றின் ஒரு படி வீதம், ஆக., 5ம் தேதிக்குள், சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044- -2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...