தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக்
பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி
நியமிக்கப்பட்டுள்ளார்.
மெட்ரிக் பள்ளி இயக்ககம், முறைசாரா கல்வி
ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன.
முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக்
இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர்.
இந்நிலையில், மேல்நிலைப்
பள்ளி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர்
கருப்பசாமி ஆகியோர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில்,
கருப்பசாமி மெட்ரிக் பள்ளி இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி
இயக்ககத்துக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் :
தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க
கல்வி, மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில்
இயங்குகின்றன.
அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...