Home »
» பி.ஆர்க்., படிப்பு இன்று கவுன்சிலிங்
பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜினியரிங் படிப்பான, பி.ஆர்க்., படிக்க, இந்த ஆண்டு,2,500
பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 181 பேர், 'நாட்டா' என்ற தேசிய
தகுதி தேர்வு எழுதாததால் நிராகரிக்கப்பட்டனர். இந்நிலையில், பி.ஆர்க்.,
கவுன்சிலிங், இன்று சென்னை அண்ணா பல்கலையில் நடக்கிறது.
காலை, 7:30 மணிக்கு,
மாற்று திறனாளி மாணவர்களுக்கும், காலை, 9:00 மணி முதல் மற்ற
மாணவர்களுக்கும் கவுன்சிலிங் துவங்கும். ஒரே நாளில், 1,868 இடங்கள்நிரப்பப்படும்.
இந்த ஆண்டு, பி.ஆர்க்., தரவரிசைப் பட்டியலில், அதிகபட்சமாக, 400க்கு, 293
மதிப்பெண், 'கட் ஆப்' ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...