ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டையைப் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
''ரயில் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது.
கவுன்ட்டர்கள் மட்டுமின்றி, ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதும் அவர்கள்
சலுகை பெறும் விதமாக பிரத்தியேக புகைப்பட அடையாள அட்டையை ரயில்வே துறை
வழங்குகிறது. இந்த அடையாள அட்டையைப் பெற முக்கியமான கோட்ட அலுவலகங்களில்
வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே, அடையாள அட்டை தேவைப்படுவோர் தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோட்ட அலுவலங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளருக்கு அனுப்பலாம். மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தும், அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட கோட்ட அதிகாரியை அணுகி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...