ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி கட்டாயம் வங்கிக்கணக்கு துவங்கி
இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.
தபால் அலுவலகம்
மூலம் வழங்கும் சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில
அரசுகள், ஏழை, எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள, பல உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், 1லட்சத்து, 14 ஆயிரத்து, 421
பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் முதியோர் உதவி
தொகையான, 1,000 ரூபாய் இதற்கு முன் தபால் நிலையத்தில் இருந்து அவரவர்
வீட்டு முகவரிக்கு வழங்கப்பட்டது.
வாரிசுகளால் கைவிடப்பட்டு, வறுமையில் வாடும் முதியோர்களுக்கு
இந்த தொகை பயனுள்ளதாக உள்ளது. இதை நம்பி பலர் வாழ்கின்றனர். ஏற்கனவே,
முதியோர் உதவித்தொகை பெறுவோர், மற்றும் புதியதாக உதவித்தொகை கேட்டு
மனுக்கள் கொடுத்துள்ளவர்களுக்கு, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள வங்கியில்
கணக்கு துவக்கி அதற்கான சேமிப்பு கணக்கு எண்ணை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்
கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என, அதிகாரிகள்
கூறுகின்றனர்.
இதனால், ஓய்வூதியதாரர்களுக்கு அந்தந்த பகுதி தாலுகா
அலுவலகங்களில் மனு கொடுப்போருக்கும், உதவி தொகை வரவில்லை என, கேட்டு
வருவோருக்கும் வங்கி கணக்கு துவங்கி அதற்கான எண் கொடுக்க வேண்டும் என,
அறிவுறுத்தி வருகின்றனர்.இதற்கு முன், பயனாளிகள் வீட்டு விலாசத்திற்கு பணம்
தபால் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்கள் வங்கி கணக்கு
துவங்கி அதன் மூலம் பணம் எடுத்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.இதனால்
ஓய்வூதியம் பெறுபவர்கள் நகர் பகுதியில் வங்கியில் கணக்கு துவங்க அலைந்து
வருகின்றனர். கிராம பகுதியில் வங்கி பணியாளர்கள் அதற்கான வேலைகள் செய்து
வருகின்றனர்.
மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டம்
இந்திரா முதியோர் ஓய்வூதிய திட்டம்
இந்திரா ஆதரவற்ற விதவை திட்டம்
இந்திரா மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்
மாநில அரசு ஓய்வூதிய திட்டம்
ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம்
ஆதரவற்ற மாற்றுத் திறனாளி நிதி உதவி திட்டம்
கணவனால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவி திட்டம்
முதல்வர் ஓய்வூதிய திட்டம்
திருமணமாக பெண்கள் ஓய்வூதிய திட்டம்இவை போன்ற திட்டங்கள், மத்திய, மாநில அளவில் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பயன் பெறும்
ஒவ்வொருவருக்கும் மாதம் தலா, 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்
என, அரசு எங்களுக்கு கடந்த மாதம் முதல் உத்தரவிட்டுள்ளது. இனி, வங்கி
கணக்கு இல்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படாது. தபால் அலுவலகத்தில் பணம்
கொடுப்பதை நிறுத்த சொல்லி விட்டோம். வங்கி மூலம் மட்டுமே ஓய்வூதியம்
வழங்கப்படும்.மாவட்ட அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...