நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு
மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு
("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, தனியார் பள்ளி
மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில்
அதிக மதிப்பெண்கள் பெற்று, கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில்
எளிதாக சேர்க்கை பெற்று வந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய
உத்தரவு, மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமன்றி, சிறப்பிடம் பெற்ற மாணவர்களின்
பட்டியலை வெளியிட்டு சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளையும் சற்று அதிரச்
செய்துள்ளது. பொதுவாக, தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ, மாணவிகளால் மட்டுமே
எளிதாக எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில்
மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகள் சற்று
அச்சத்துடனேயே "நீட்' தேர்வை எதிர் நோக்கியிருக்கின்றனர். எனினும், நீட்
தேர்வு என்பது மாணவர்களைத் தயார்படுத்துவதில் உள்ள சிறிய வேகத் தடைதான்.
தற்போதுள்ள பாடத் திட்டத்துடன், மாணவர்களை "நீட்' தேர்விலும் வெற்றி பெறும்
விதத்தில் தயார் செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன
is this news true?
ReplyDelete