நாகர்கோவிலில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் (ஜாலி பொனிடிக்) பயிற்சி அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டத்தில்
உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாலி பொனிடிக் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக அகஸ்தீசுவரம் வட்டார வளமையத்திற்கு உள்பட்ட 12 பள்ளிகள் தேர்வு
செய்யப்பட்டு ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும், ஆங்கில
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் டாக்டர் கோமதி பயிற்சியளித்தார்.
2 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தொடங்கி வைத்துப் பேசுகையில்,
ஆங்கில மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் அதன் சரியான உச்சரிப்பை
ஆசிரியர்கள் இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொண்டும் மாணவர்களுக்கு பயிற்சி
அளிப்பர் என்றார் அவர்.
அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வில்வம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...