பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு ரூ. 980 கோடி
ஒதுக்கியிருப்பதாக, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள்
செயலர் டி. ராமசாமி தெரிவித்தார்.
இந்தியாவில் 2004ஆம் ஆண்டுக்கு முன்னதாக சுனாமி குறித்தும்,
ஆழிப் பேரலை, பேரழிவு பூகம்பம் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுத்துச்
செல்வதில் அதிகம் அக்கறை செலுத்தப்படாமலேயே இருந்தது. 2007இல் இத்தகைய
ஆய்வுகளின் அவசியத்தை உணர்ந்து சுனாமி குறித்தும் அறியும் தொழில்நுட்பத்தை
புகுத்தியது. உலகளவில் இந்திய தொழில்நுட்பம்தான் சுனாமி குறித்து அறியும்
முறையில் 2ஆவது இடத்தை வகிக்கிறது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப முறையானது பூமிக்கடியில் நிகழும்
அதிர்வுகளை கண்டுணர்ந்து 13 நிமிடங்களில் விண்ணில் உள்ள செயற்கைக்
கோள்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து முழுமையான தகவல்களைப் பெறும்
வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள மத்திய அரசு நிறுவனம் இத்தகைய ஆய்வுகளை
சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ரேடார் சிக்னல் மூலம் பருவநிலை
மாற்றங்களைக் கண்டறியும் ஆய்வுகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இவை
இந்தியாவின் மழைக் காலங்களை அறியவும், தட்பவெப்ப நிலைகளை அறியவும் பெரிதும்
உதவியாக அமைந்துள்ளது.
எனவே, இத்தகைய ஆராய்ச்சிகளுக்காக மட்டும் மத்திய அரசு ரூ. 980
கோடி வழங்கி வருகிறது. பூகம்ப அதிர்வுகள் குறித்த ஆய்வுகளை
முன்னெடுப்பதில் ஐஐஜி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துடன் சுந்தரனார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதை இரு அமைப்புகளும் நல்ல
முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டு முயற்சியானது மத்திய தோல்
ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே
நீடித்துவரும் கூட்டுறவைப் போன்றதாக அமைய வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...