பாலியல் தொல்லைக்குள்ளான அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொல்லைக்குள்ளான அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
பாலியல் தொல்லைக்குள்ளான பெண்கள், மிரட்டப்படுவதும்,
அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்படும். உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவது,
ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்துவது ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்படும்
பெண்களுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அவர்களின்
விடுப்பு கணக்கில் சேராது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் பேறுகால
விடுமுறையை இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது இது
தொடர்பான புதிய மசோதாவை வருகிற 18–ந்தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால
கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...