இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20
அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத்
தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை
நடத்துகிறது.
இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Allahabad Bank - 525
2. Andhra Bank - 300
3. Bank of Baroda - 00
4. Bank of India - 200
5. Bank of Maharashtra - 00
6. Canara Bank - 2200
7. Central Bank of India - 300
8. Corporation Bank - 00
9. Dena Bank - 00
10. IDBI Bank - 1350
11. Indian Bank - 00
12. Indian Overseas Bank - 00
13. Oriental Bank of Commerce - 500
14. Punjab National Bank - 750
15. Punjab & Sind Bank - 158
16. Syndicate Bank - 400
17. UCO Bank - 540
18. Union Bank of India - 899
19. United Bank of India - 200
20. Vijaya Bank - 500
வயதுவரம்பு:இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை 26.07.2016 முதல் 13.08.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_advertisment_for_CWE_PO_MT_VI.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...