மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம்
அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும்
கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம்
அறிவித்துள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் எப்போது
முதல் அமலுக்கு வரும் என்ற சந்தேகமும் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய செயல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷிவ்கோபால் மிஸ்ராவிடம் கேட்ட போது, ஜூலை மாதம் முதல் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கான அரசாணை இன்று அல்லது அடுத்த வார துவக்கத்தில் வெளியிடப்படலாம். முதலில் அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும். பின்னர் பல்வேறு கமிட்டிகள் அளித்துள்ள பரிந்துரைகள், கோரிக்கைள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...